‘மாஸ்டர்’ பட தியேட்டர்களுக்கு அபராதம்…….

111
Spread the love

ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக தியேட்டர்கள் திறக்கப்பட்டது. 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுடன் தியேட்டர்களில் திரைப்படங்கள் திரையிடப்பட்டாலும் ரசிகர்களின் வருகை மிக குறைவாகவே இருந்தது. இந்நிலையில் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வௌியானது. இந்நிலையில் விதிமுறைகளை மீறாமல் 50 சதவீத ரசிகர்களை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் மீறும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 2 திரையரங்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்திய வருவாய்துறை அலுவலர்கள் தியேட்டருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். 

LEAVE A REPLY