திருப்பதியில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி!..

58
Spread the love

திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட  170ற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் திருப்பதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் திருப்பதியில் மேலும் ஒரு ஊழியர் கொரோனாவால் பலியாகியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான ஊழியர் வீராசாமி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி(75) என்ற கொரோனா பாதிப்பால் கடந்த 20 ஆம் தேதி பலியானது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY