திருவண்ணாமலை இளைஞருக்கு கொரோனா வைரஸ்….

159
Spread the love
 
கொரோனா உயிர்கொல்லும் வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, சீனாவில் இருந்து திருவண்ணாமலை வந்த தமிழகத்தை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

திருவண்ணாமலையில் உள்ள வ.உ.சி நகரை சொந்த ஊராக கொண்ட வினோத் என்பவர் சீனாவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி சீனாவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்ற அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்து உள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர், தான் சீனாவிலிருந்து வந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் அறிகுறிகுறிகள் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை தனி அறையில் அவர் அனுமதித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதா என உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY