Spread the love

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க இருந்த  நிலையில் நேற்று இந்த தேர்தலை தள்ளி இத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் என்.ஜி.ஆர். பிரசாத் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். 

இதில் நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும் என்று கோர்ட் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ஜன.28ம் தேதி தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. இந்த தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 14 ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும். இடைத் தேர்தலால் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு திருவாரூர் மாவட்ட மக்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY