டில்லி போயிட்டு வந்த 50 பேருக்கு கொரோனா.. 616 பேர் எங்கே?

352
Spread the love
தமிழகத்தில் 64 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என நேற்றுவரை தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இன்று காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்தது. இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லி நிஜாமுதீனில் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர்.  அவர்களில் 515 பேர் வரை கண்டறியப்பட்டு உள்ளனர்.  தலைமறைவாக இருக்கும் 600பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வந்திருக்கும் 515 பேரில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்கள் அனைவரின் உடல் நலமும் சீராக உள்ளது.  யாரும் அவசர சிகிச்சை பிரிவில் இல்லை. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது என்றார் பீலா ராஜேஷ்.

LEAVE A REPLY