ஜெயிக்கப்போவது.. ஸ்டாலின் கிஷோரா..?… சுனில் பழனிச்சாமியா?.. பாகம்-1

699
Spread the love

அடுத்தது யாரு எடப்பாடியா? ஸ்டாலினா? .. தற்போது தமிழகத்தில் சந்தித்துக்கொள்ளும் இருவர் கேட்கும் முதல் கேள்வி இதுவாகவே உள்ளது.. வாக்கு எண்ணிக்கைக்கு சுமார் 23 நாட்கள் என்பதால் பொதுமக்களுக்கு பலவகையிலும் சந்தேகம்..இந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெளிபார்வைக்கு போட்டியிட்டது அதிமுகவும், திமுகவும் என்றாலும்..அவர்களின் பின்னால் இருந்து இயக்கிய கார்பரேட் நிறுவனங்களான ஓஎம்ஜியும்- ஐபேக்கின் ஆகியவற்றின் எதிர்காலமும் இந்ததேர்தலில் உள்ளதாகவே தேர்தல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்..

இந்த இரு நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுனிலும் ( திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்) , பிரசாந்த் கிஷோர் (பீகார் மாநிலம் ஷாகாபாத்) இருவரில் யார்? ஜெயிக்கப்போகிறார்கள்..?   குஜராத் முதல்வராக இருந்த மோடியின் அரசியல் வியூகங்களுக்காக 2012ம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்ட நிறுவனம் தான் ஐபேக். இந்த நிறுவனத்தின் தலைவரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றிவர் தான் சுனில். அதன் பின்னர் 2016ம் ஆண்டு சட்டமன்ற  தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவிற்காக கடந்த 2014ம் ஆண்டு இறுதியில் சுனிலை தமிழகம் கொண்டு வந்தவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் என்கிற எண்ணத்தை கட்சியிலும்,  பொதுமக்கள் மத்தியிலும் உருவாக்க வேண்டிய பொறுப்பு சுனிலிடம் வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்க முன்னர் ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ என்கிற வித்தியாசமான பிரச்சாரம் பட்டித்தொட்டிகளை சென்றடைந்தது.. இதன் இயக்குனர் சுனில் தான்..

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் யாருக்கு சீட்டு வழங்கலாம் என்பது வரை ஓஎம்ஜியின் சுனில் டீம் தயார் செய்து கொடுத்த பட்டியலை பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனாலும் அந்த தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். எனினும் அதிமுக-திமுக இடையேயான வாக்கு விகிதம் 2 சதவீததிற்குள்ளாகவே தான் இருந்தது. மேலும் சுனில் கொடுத்த பட்டியலில் 13 தொகுதிகளில் ஸ்டாலின் குடும்பத்தினர் வேட்பாளர்கள் மாற்றியதால் தான் இந்த பிரச்சனை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில்  திமுகவில் ஸ்டாலினிற்கு அடுத்தது யார்? என்கிற நிலையில் அரசியல்  வேண்டாம் என்று இருந்த உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்து இளைஞர் அணி செயலாளராக்கியது சுனில் ஐடியா என்றே திமுக நிர்வாகிகள் கூறினர். அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்கள் பிரிந்தது, அமமுக உருவானது என தமிழக அரசியல் நகர்கவுகளுக்கு சுனில் காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த சமயத்தில் எம்பி தேர்தலில் வேட்பாளர்கள், பிரச்சாரம் ஆகியவற்றை கவனித்து வந்தார் ஓஎம்ஜி சுனில்.  21 தொகுதி இடைத்தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றினால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும் என கருதப்பட்ட நிலையில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று அதிர்ச்சியை கொடுத்தது. இனி எடப்பாடியை ஒன்றும் செய்ய முடியாது என்கிற முடிவிற்கு வந்து விட்ட திமுக தரப்பு அடுத்தாக 2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்த ஆரம்பித்தது. கமல் அரசியலுக்கு வந்து விட்ட நிலையிலும் ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக கூறும் நிலையிலும் எப்படியும் வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ” திமுகவின் கிச்சன் கேபினேட்டில்” சிலர் சுனில் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த சமயத்தில் மம்தா பானர்ஜியின் சிபாரிசின்பேரில் கமலின் மக்கள் நீதி மய்யத்த்திற்காக பேச்சுவார்த்தை நடத்த பிரசாந்த் கிஷோர் சென்னை வந்து சென்ற விபரம் திமுகவின் தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு தெரியவந்தது. பிகாரில் நிதிஷ்குமார், பஞ்சாபில் அம்ரீந்தர் சிங், டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் வெற்றியை ஐபேக்கின் பிரசாந்த் கிஷோர் பெற்றுக்கொடுத்தது குறித்து மீண்டும் திமுகவின் கிச்சன் கேபினேட்டில் பேசப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பிகேவை சந்தித்து பேசினார் சபரீசன். இந்த விஷயம் கேள்விப்பட்டதும் வருத்தப்பட்ட சுனிலை அழைத்து பேசினார் ஸ்டாலின்.. இந்த தேர்தலில் பிகேவுடன்  இணைந்து நீங்கள் செயல்படுங்கள் என மீண்டும் பிகேவுடன் சுனிலை இணைக்க ஆசைப்பட்டார்.. ஸ்டாலின்.. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத சுனில் தனது ஓப்பந்தத்தை ரத்து செய்தார். சில வாரங்களில் தன்னுடைய பழைய பாஜ நண்பர்கள் மூலம் கர்நாடக முதல்வரின் அரசியல் ஆலோசகரானார் சுனில்.. திமுகவின் அரசியல் பணிகளை கவனிக்க 300 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பிரசாந்த் கிஷோர்.. உடனடியாக தேனாம்பேட்டையில் ஐபேக் நிறுவனத்திற்கு அலுவலகத்தை தயார் செய்து கொடுத்தார் சபரீசன்.. ஏற்கனவே தங்களது அரசியல் பணிகளின் குறுக்கீடுவதாக சுனில் மீது கோபத்தில் இருந்த திமுகவின் சீனியர்கள் அடுத்தாக பிரசாந்த் கிஷோர் என்றவுடன் நம்ம கட்சியை பற்றி வடநாட்டு சேட்டுக்கு என்ன தெரியும் என கோபப்பட்டனர்.. ..

தொடர்ச்சி நாளை….

 

LEAVE A REPLY