வகுப்பை கண்காணிக்க ‘ஆப்’.. அரட்டை ஆசிரியருக்கு ‘ஆப்பு’

321
Spread the love

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் எப்படி இருக்கிறது? என்பது குறித்து கண்காணிக்க பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒரு ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆப் மூலம் முதற்கட்டமாக சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  வகுப்பறைகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? என்பது குறித்தும், மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர வகுப்பறையில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகள், அவர்களின் சந்தேகங்களுக்கு எந்த மாதிரியான பதில் அளிக்கப்பட்டது? மாணவர்கள் வருகை பதிவேடு, செயல்முறை கற்பித்தல் எந்த அளவுக்கு இருந்தது? போன்ற தகவல்களையும் இந்த ஆப் மூலம் குறிப்பிட ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆசிரியர்கள் அளிக்கும் விவரங்கள்  அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்று மதிப்பீடு செய்த பின்னர், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்பு மாநில முழுவதும் இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY