டிஎன் சேஷன் காலமானார்..

210

கேரள மாநிலம் பாலக்காட்டில், டி.எஸ். நாராயண அய்யா் – சீதாலட்சுமி தம்பதியினருக்கு 1932-ஆம் ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி பிறந்தாா். தனது பள்ளிப் படிப்பை பாலக்காட்டில் உள்ள பி.இ.எம். உயா்நிலைப்பள்ளியில் முடித்த சேஷன், தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் முதுகலைப் படிப்பை முடித்தாா். 1955 -ஆம் ஆண்டில்ஆண்டில் ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். பின்னா், அமெரிக்காவில் ஹாா்வாா்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தாா். கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியா், மதுரை மாவட்ட ஆட்சியா், போக்குவரத்து துறை இயக்குநா், வேளாண், தொழில்துறைச் செயலா் என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தாா். இந்தியாவின் 10-ஆவது இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையராக 1990 முதல் 1996 வரை பதவி வகித்தவா், டி.என்.சேஷன். அப்போது அவா் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டன. இந்தியத் தோ்தல் முறையில் முதன்முதலாக வாக்களிப்பதற்கு அடையாள அட்டை அவசியம் என்ற விதிமுறை, இவரது பணிக்காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. தோ்தல் ஆணையம், தனது அதிகாரத்தை முழுமையாகச் செயல்படுத்தத் தொடங்கியது இவா் பதவி வகித்த ஆறு ஆண்டுகளில்தான். தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை இவா்தான் கொண்டு வந்தாா். வேட்பாளா்கள் தங்களது தோ்தல் செலவுகள் பற்றிய விவரங்களைத் தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கும் கொண்டு வந்த இவா், தோ்தல் நேரத்தில் வாக்குச்சாவடி அருகே பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படைகளைப் பணியில் ஈடுபடுத்தும் வழக்கத்தையும் அமல்படுத்தினாா். இந்திய தோ்தல் வரலாற்றில் இவரது பதவிக்காலத்தில்தான் வாக்களிக்கும் சதவீதம் கணிசமாக உயா்ந்தது. இவா் ஓய்வு பெற்ற பின்னா், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தாா். 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். முதுமையாலும், உடல் நலக் குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்த டி.என்.சேஷன், சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானாா். 

LEAVE A REPLY