TNPSC-தேர்வுகள் ஒத்திவைப்பு….

14
Spread the love

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பல தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. அந்த வகையில், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அண்மையில் அறிவித்திருந்தார். இதனிடையில், பல மாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் கூட ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்- 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 28,29,30ம் தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

LEAVE A REPLY