தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக

410
Spread the love

கூட்டணி விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தேமுதிக தடுமாறியே வந்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆரம்பத்தில் அதிமுகவுடன்தான் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. ஸ்டாலின் வந்து சென்ற பிறகு அவர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. காரணம் ஸ்டாலின்  வந்த பிறகு தேமுதிகவின் மவுசு கூட ஆரம்பித்தது தான். ஆனால் எத்தனை சீட்டு, எந்தெந்த தொகுதிகள் என்ற விஷயத்தில் தேமுதிக கறாராகவே இல்லை. பாமக, பாஜ உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு மீதம் சில தொகுதிகள் மட்டுமே இருக்கும் நிலையில் இத்தனை வேண்டும், இந்தெந்த தொகுதிகள் தான் வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்வது? இது தான் குழப்பத்திற்கு காரணம் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

இதன் காரணமாகவே தேமுதிக கடைசி நேரத்தில் திமுகவிடம் ஆதரவு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திமுகவிடம் பேசி விட்டு பேசவில்லை என கூறியதால் தற்போது அதிமுக தரப்பு தங்கள் நிலையை சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சொன்னபடி 4+1 மட்டும் தான். அதேபோல் ஏற்கனவே சொன்ன தொகுதிகள் தான். இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை. ஓகே என்றால் வாருங்கள், அவ்வளவு தான் என அதிமுக தரப்பு கூறிவிட்டது. இதனால் வரும் 11ம் தேதி தனித்துப்போட்டி என்ற  அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர தேமுதிகவிற்கு வேறு வழியில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..   

LEAVE A REPLY