மழை படிப்படியாக குறையும்… வானிலை மையம் தகவல்…

122
Spread the love

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறும்போது, இன்று இரவிலிருந்து மழை படிப்படியாக குறையும் என தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரியில் தலா 28 சென்டி மீட்டர் மழையும், சேத்தியாத்தோப்பில் 25 சென்டி மீட்டர் மழையும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY