இன்றைய ராசிபலன்

1248
Spread the love
வியாழக்கிழமை: (02.04.2020)
நல்ல நேரம்     :   10.30-11.30, மாலை: 12.30-01.30
இராகு காலம்  :   01.30-03.00 
குளிகை          :   09.00-10.30
எமகண்டம்     :   06.00-07.30
சூலம்              :     தெற்கு 
சந்திராஷ்டமம்:   மூலம், பூராடம்.
 

மேஷம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களில் வெளிநபர்களின் அறிமுகம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.

கடகம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வேலை ஆட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினை ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

துலாம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

விருச்சிகம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் மன அமைதி குறையலாம். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 01.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பின் மன உளைச்சல்கள் குறைந்து சாதகமான சூழ்நிலை உருவாகும்.

தனுசு

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.33 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது. ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கட்டுபாடு தேவை.

மகரம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து சென்றால் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவு கிட்டும்.

மீனம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன்பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். சுபகாரியம் கைகூடும்.

LEAVE A REPLY