இன்றைய ராசிபலன்…

145
Spread the love

திங்கட்கிழமை: (26.10.2020)
நல்ல நேரம் : 6.15-7.15, மாலை:3.00-4.00
இராகு காலம்:7.30-9.00
குளிகை      : 1.30-3.00
எமகண்டம் : 10.30-12.00
சூலம்          : கிழக்கு
சந்திராஷ்டமம்:பூசம்.

மேஷம்

சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

ரிஷபம்

உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள். செயல்படுவீர்கள். பிள்ளைகளின் சொல்லுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேல்அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நட்பால் ஆதாயமும் உண்டாகும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்

துலாம்

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாற்றங்கள் நிறைந்த நாள்.

தனுசு

குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். பழையபிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன் கோபத்தை குறைத்து திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும் தன்மை உள்ளது. பொறுமை
தேவைப்படும் நாள்.

கும்பம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும்.வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகளை உணர்வீர்கள். போராடிவெல்லும் நாள்.

மீனம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். நம்பிக்கைக்குரியவர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதுதொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள்.

LEAVE A REPLY