இன்று …ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்போற்சவம்

152
Spread the love

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6-ம் நாளான நேற்று வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்தார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் உலா வருகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 8-ம் நாளான இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு உபநாச்சியார்களுடன் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

 

LEAVE A REPLY