தக்காளியை மிக்ஸியில் மைய அரைத்து மசித்து அதனுடன் மூன்று டீஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் பருக்களால் பள்ளமாக இருக்கும் இடங்களில்  தடவி 10 நிமிடங்கள் காயவைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகத்தில் இருக்கும் சில நாட்களில் பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.

 இதை தொடர்ந்து செய்துவந்தால் முகப்பரு குறையும். மேலும் முகப் பருக்களால் சருமத்தின் நிறம் மங்கியிருந்தாலும் அவை நாளடைவில் மாறதொடங்கும். தினமும் காலையில் இதை செய்துவரலாம். தக்காளியும் தயிரும் அதிக நீர்ப்பதமாக இருக்கும் என்பதால் நீங்கள் இரண்டையும் சேர்க்கும் போதும் மசிக்கும் போதும் நீர் விட தேவையில்லை

 வெயிலில் சென்று வந்தால் சருமத்தில் சரும துவாரத்தில் அழுக்குகள் படர்ந்திருக்கும்  தக்காளித் துண்டை மசித்து தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் ஃபேஸ் பேக் போல் போட்டு அரை மணி நேரம் காயவிடவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி சர்க்கரை தொட்டு தொட்டு ஸ்க்ரப் போன்றும் செய்யலாம். பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி துடைத்தால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும். பிறகு முகத்துக்கு மாய்சுரைசர் தடவினால் முகத்தில் பளபளப்பு அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களும் வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் பார்லர் போகாமலேயே முகத்தில் தனி களை மிளிரும்.

தக்காளியையும் வெள்ளரியையும் சம அளவு கலந்து பேஸ்ட் போல் ஆக்கி கண்களுக்கு கீழ் தடவி னால் கருவளையத்தால் உண்டான கருமை மறைய தொடங்கும். இதை கருவளையத்துக்கு மட்டும் அல்லாமல் முகத்தில் இருக்கும் கருமை நீக்கவும் பயன்படுத்தலாம். முகம், கழுத்து பகுதியில் இருக்கும் கருமையும் போக்கும். வாரம் ஒரு முறை இதை பயன்படுத்தினால் முகத்தில் கருவளையம் சருமத்தில் கருமை எப்போதும் வராது.

சிலருக்கு முகத்தில் ஆங்காங்கே கருமை நிறம் அடர்ந்து தென்படுவதுண்டு. ஒரு சிலருக்கு இவை நன்றாக தெரியும் அவர்கள் தக்காளி துண்டுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி ஃபேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் இப்போது முகம் பளிச்சென்று இருக்கும்.

 வெறும் தக்காளியை மட்டும் மசித்து அதை மட்டும் முகத்தில் தடவி வந்தாலே போதும் தக்காளி சரும சுருக்கங்களிலிருந்தும் களையிழந்த முகத்தை மீட்கலாம். 

 

LEAVE A REPLY