நாளை சபரிமலை நடைதிறப்பு

165
Spread the love

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பங்குனி மாதப் பூஜைக்காக மார்ச் 11-ம் தேதி (நாளை) கோயில் நடை திறக்கப்படுகிறது. மார்ச் 12-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை காலை 7 மணி அளவில் சபரிமலை தந்திரி கண்டரு ராஜீவரரூ கொடியேற்றி தொடங்கி வைக்கிறார்.

21-ம் தேதி வரை நடைபெற உள்ள உற்சவ விழாவில் தினமும்  ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், கணபதி ஹோமம், முளைக்கட்டப்பட்ட நவதானிய பூஜை, அத்தாழ பூஜை, ஸ்ரீ பூதபலி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி இரவு பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், 21-ம் தேதி பம்பை ஆற்றில் ஸ்ரீ ஐயப்பனுக்கு ஆராட்டும் அபிஷேகமும் நடைபெறும். இவ்வாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY