நாளை தியேட்டரில் ரிலீசாகும் ”கர்ணன்”…

62
Spread the love

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர். படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது டிவீட்டர் பக்கத்தில் நாளை கர்ணன் படம் வெளியாகவுள்ளது என்பதை குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை இன்று காலை வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளதால் தமிழக அரசு வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்தது. இதனால் கர்ணன் திரைப்படம் வெளியாகுமா இல்லையா என்ற குழப்பம் எழுந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

இந்த டிவீட்டில் ” சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிட ப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் ” என்று பதிவிட்டுள்ளார். இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

LEAVE A REPLY