டிராபிக் ராமசாமி காலமானார்..

81
Spread the love
சென்னையில் மீன்பாடி வண்டி இயங்க தடை கேட்டும், சட்டவிரோத பேனர்களை அகற்ற கோரியும், மதுரை கிரானைட் முறைகேடு குறித்தும் ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வெற்றி கண்டவர் டிராபிக் ராமசாமி (87). சமூக ஆர்வலரான இவர் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விடாமுயற்சியுடன் பல போராட்டங்களை நடத்தி உள்ளார். குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை தனிஆளாக சென்று கிழிப்பது போன்ற போராட்டங்களால் பரபரப்பாக பேசப்பட்டவர் டிராபிக் ராமசாமி. கடந்த ஏப்ரல் 19-ந் தேதி உடல்நிலை மோசமானதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு டிராபிக் ராமசாமி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 
 

LEAVE A REPLY