வெல்லமண்டி ரீஎன்டரி எப்படி?.. திமுக பார்முலாவை கையில் எடுத்த அதிமுக..

557
Spread the love

திருச்சி அதிமுக 3 ஆக பிரிக்கப்படும் என கிட்டத்தட்ட 6 மாதகாலமாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பான அறிவிப்பு நேற்றிரவு வெளியானது. இதன்படி திருச்சி அதிமுக மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டு அவருக்கு திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு மற்றும் துறையூர்(தனி) தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக(ஏற்கனவே மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த) குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி தொகுதிகள்  வழங்கப்பட்டுள்ளன. திருச்சி அதிமுக 3 ஆக பிரிக்கப்படும்பட்சத்தில் குமார் ஒரு மாவட்ட செயலாளராக இருப்பார் எனவும் முத்தரையர் இனத்தை சேர்ந்த ஒருவருக்கு என்கிற பட்சத்தில் பரஞ்சோதி, சிவபதி, பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுவதாகவும், மூன்றாவது மாவட்ட செயலாளர் மைனாரிட்டி இனத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு என அதிமுக வட்டாரத்தில் பேச்சு இருந்து வந்தது.

 அந்த வகையில் மாவட்ட செயலாளராக குமார், பரஞ்சோதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக பார்முலாவின்படியே மீண்டும் வெல்லமண்டி நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி திமுக 3 ஆக பிரிக்கப்பட்ட போது மைனாரிட்டி என்கிற கேட்டகிரியில் மத்திய மாவட்டம் என திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், லால்குடி தொகுதிகளுக்கு சோழிய வெள்ளாளர் இனத்தை சேர்ந்த வைரமணி மாவட்ட செயலாராக அறிவிக்கப்பட்டார். அதே பாணியில் சோழிய வெள்ளாள இனத்தை சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாவட்ட செயலாளராகியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.. 

LEAVE A REPLY