சீட்டுக்கு ஆசைப்படும் பிரபல திருச்சி டாக்டர்.. அதிருப்தியில் நிர்வாகிகள்..

756
Spread the love

திமுகவின் முதன்மைச் செயலாளர் நேரு திருச்சி மேற்கு தொகுதியின் எம்எல்ஏ.  கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் அரசு கொறடாவாக இருந்த மனோகரன் போட்டியிட்டு நேருவிடம் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேருவை எதிர்த்து போட்டியிடுவது யார்? என்பது குறித்து திருச்சி அதிமுகவில் பட்டிமன்றமே நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் திருச்சி  மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட திருச்சியின் பிரபல டாக்டர் ஒருவருக்கு ஆசை வந்திருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நல்லுசாமியின் மகன் டாக்டர் செந்திகுமார்.பிரபல இருதய நோய் மருத்துவர்,  கேஎம்சி, அப்பல்லோ ஆகியவற்றில் பணியாற்றிய டாக்டர் செந்தில்குமார் தற்போது சாலை ரோட்டில் ராணா ஆஸ்பத்திரியை நடத்தி வருகிறார். இந்த முறை தனக்கு மேற்கு சட்டமன்ற தொகுதி சீட்டு வாங்கிக்கொடுங்கள் என அமைச்சரும் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜனிடம் தந்தை நல்லுசாமியுடன் போய் கேட்டிருக்கிறார் டாக்டர் செந்தில்குமார்.

 இது தொடர்பாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மண்டல பொறுப்பாளர்  வைத்தியலிங்கத்திடம் கூறியிருக்கிறார். மறைமுகமாக மேலிடத்தில் நடைபெறும் இந்த “மூவ்” தற்போது திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது. வருஷம் முழுவதும் நாங்க கட்சி கட்சி கட்சியினு அலைவோம், தேர்தல்னா மேலிடத்துல பேசி சீட்டு வாங்கிடுவாங்களாம்.. ஜெயிக்கிறோம், தோக்குறோம் சீட்டு நிர்வாகிகளுக்கு தான்..  என கோபத்தில் இருக்கின்றனர் மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள்.. 

LEAVE A REPLY