தீவிரவாதி ஒத்திகை… திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு..

93
Spread the love

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கையில் துப்பாக்கி ஏந்தி அனைவரையும் சுட்டுக்கொண்டே, வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்குள் பயங்கரவாதி ஒருவன் நுழைய முயன்றான். அவனை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் சுற்றி வளைத்து, மடக்கி அவனை வீழ்த்தி, அவனிடம் இருந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

இவ்வாறான முன்னெச்செரிக்கை பாதுகாப்பு ஒத்திகை, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில் 50க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், தமிழக போலீசார், விமான நிலைய ஊழியர்கள் இணைந்து நடத்தினர். இந்த ஒத்திகையால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY