பாஸ்போர்ட்டில் போலி முத்திரை.. திருச்சியில் வாலிபர் கைது…

90
Spread the love

குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள் கைது

திருச்சி காவேரி ரோடு வீரமுத்து நகர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் லட்சுமணன்( 32) இவர் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த விக்கி என்கிற பழனிச்சாமி, ஆனந்தகுமார் மற்றும் ஜான் தோப்பு பகுதியை சேர்ந்த பாபு ஆகிய 3 பேரும் குடிபோதையில் லட்சுமணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்… பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த விக்கி என்கிற பழனிசாமி கத்தியை எடுத்து லட்சுமணன் கழுத்தில் வைத்து குடிப்பதற்கு பணம் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து லட்சுமணன் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

போலி முத்திரையில் வெளிநாடு சென்ற வந்த வாலிபர் திருச்சியில் கைது.

புதுக்கோட்டை மாவட்டம் கற்பக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (27 )இவர் மலேசியாவில் தோட்ட வேலை செய்து வந்துள்ளார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு டூரிஸ்ட் விசா மூலம் மலேசியா சென்ற பிரசாத் அங்கு பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து மலேசியா சென்றது போன்ற தனது பாஸ்போர்ட்டில் போலியான இமிகிரேஷன் பிரிவு முத்திரை பதித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மலேசியாவிலிருந்து திருச்சிக்கு பிரசாத் வந்தபோது இமிகரேஷன் பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது ஒரு போலியான முத்திரை வைத்திருந்தது தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து இவரை ஏர்போர்ட் இமிகிரேஷன் பிரிவு அதிகாரி பவன் மணி அளித்த புகாரின் அடிப்படையில் பிரசாத்மீது வழக்குப்பதிவு செய்து ஏர்போர்ட் போலீசார் சிறையில் அடைத்தனர். 

LEAVE A REPLY