திருச்சி ஏர்போர்ட்டில் கஞ்சா வியாபாரி கொலை… 7 பேர் கைது…

292
Spread the love

திருச்சி ஏர்போர்ட் பாரதி நகரை சேர்ந்தவர் அருண்(25) என்பவர் பாரதி நகர் பின்புறம் தலையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார், ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில்… பெயிண்ட் வேலை செய்து கொண்டு, கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்த அருண் வீட்டில் உணவருந்தி கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்து அழைத்து சென்ற ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த ப்ரேம் (21), ஜாகீர் உசேன்(21), முபாரக் (21), தர்மசீலன்(27), மண்ணச்சநல்லூரை சேர்ந்த வீரகுமார்(24), நந்த குமார்(21), அர்விந்த்(20) ஆகியோர் முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY