திருச்சி ஏர்போட்டில் போதை பயணி ரகளை…..

80
Spread the love

ஷார்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் திருச்சிக்கு வந்தது. இதில் வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த 38 வயது ஆண் பயணி ஒருவர் போதையில் இருந்தார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதற்கான கட்டணம் ரூ.1,200-ஐ கேட்டதற்கு ரகளை செய்தார். பின்னர் அவரை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த அவரது மனைவியுடன் அனுப்பிவைத்தனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY