திருச்சி ஆவின் சேர்மன் பதவி பறிப்பு ஏன்?

5731

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதிலும் ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய சேர்மன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி ஆவின் சேர்மனாக முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆசிர்வாதம் கிடைத்தால் கார்த்திகேயனுக்கு ஆவின் சேர்மனானார் என கூறப்பட்டது. இதன் காரணமாகவே அமைச்சர் வளர்மதியும், ஆவின் சேர்மன் கார்த்திகேயனும் தனி அணியாக செயல்பட்டதோடு, மாவட்ட செயலாளர்கள் குமார், ரத்தினவேல், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக பலரையும் தூண்டி விட்டு வருவதாக  கூறப்பட்டது. இதன் எதிரொலியாக  கடந்த வாரம் இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது திருச்சி அதிமுக நிர்வாகிகள் கார்திகேயன் மீது கடுமையாக புகார்களை கூறினர். இந்த நிலையில் திருச்சி ஆவின் கலைக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய  சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 4ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, கரூர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நெருக்கமானவர் என கூறிக்கொண்டிருந்த கார்த்திகேயன் திருச்சி ஆவின் சேர்மனாக பதவி ஏற்று ஒரு ஆண்டுகாலம் கூட முடிவடையாத நிலையில் பதவி ஏன் பறிக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. முதல்வரின் பெயரை பயன்படுத்தி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி, கார்த்தியனை நேரில் அழைத்து கண்டித்தாகவும் இதன் தொடர்ச்சியாகவும் இதன் காரணமாகவே திருச்சி ஆவினும் கலைக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

LEAVE A REPLY