குடியிருப்பில் ‘குப்பை மேடு’.. திருச்சி மாநகராட்சி கவனிக்குமா?

258
Spread the love

திருச்சி ஐயப்பன் நகர் சுப்பிரமணிய நகரில் ரேஷன் கடை எதிரில் உள்ள காலி மனை குப்பை மேடாகி வருகிறது.  ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த குப்பை இப்போது பெரிய மேடாகி சுகாதாரத்திற்கு சவால் விட ஆரம்பித்திருக்கிறது. இது குறித்து அபு்பகுதிமக்கள் கூறியதாவது.. காலிமனைதானே என இருந்த நிலை மாறி தற்போது குப்பை மேடாகி விட்டது. தற்போது வீட்டு குப்பை என்பதை தாண்டி  திருச்சி கே கே நகர் மெயின் ரோட்டில் உள்ள சில நடமாடும் கடைகளில் சாப்பிட்ட குப்பை கழிவுகள் அனைத்தும் இங்கு வந்து கொட்டப்படுகின்றன. முள் செடிகளாக வளர்ந்து புதராக மாறியிருக்கும் இந்த குப்பை மேடு கொரோனா உற்பத்தி நிலையமாகி வருகிறது..  மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா? 

LEAVE A REPLY