திருச்சி வங்கி கொள்ளையன் … போதையில் உளறி சிக்கிய சுவாரசியம்

462
Spread the love

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கடந்த 20 ஆம் தேதி துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பணத்தை நிரப்ப பணம் எடுக்க சரவணன் மற்றும் அருண் என்ற 2 பேர் வந்திருந்தனர். அவர்கள் வங்கியில் பணத்தை எடுத்து அங்குள்ள  சேரில் வைத்து விட்டு மீண்டும் பணத்தை வாங்க சென்றனர். அப்போது வங்கிக்குள் புகுந்த மர்ம ஆசாமி ரூபாய் 16 லட்சம் இருந்த பையை எடுத்து சென்று விட்டான். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது திருச்சி பாலக்கரை அந்தோணி தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம் 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் போதையில் உளறி கொட்டி ஸ்டீபன் சிக்கிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று இரவு பெரம்பலூரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த ஸ்டீபனின் ரூமை தட்டி போலீசார் அழைத்துள்ளனர். அப்போது போதையில் இருந்த ஸ்டீபன் போலீசாரை பார்த்ததும் உளற ஆரம்பித்திருக்கிறார். ரூமில் உள்ள பைகளை திறந்து காட்ட வேண்டுமாறு கூற பயந்து போன ஸ்டீபன் ‘ சார் அந்த பை மட்டும் வேணாம் சார்… ’ என போதையில் உளறி சிக்கிக் கொண்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY