கொலையுண்டவரின் அண்ணன்-நண்பர் கைது… திருச்சியில் பரபரப்பு

188
Spread the love

திருச்சி தென்னூர் வா மடத்தை சேர்ந்தவர் வீரப்பன் என்கிற ராஜ்குமார் (22). வாமடத்தில் கொலையுண்ட வாழைக்காய் விஜயின் அண்ணன். இவர் சாஸ்திரி ரோடு பகுதியில் நமச்சிவாயம் என்பவரிடம் கத்தியை காட்டி அவர் சட்டைப் பையில் இருந்து 1000 ரூபாய் வழிப்பறி செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள தில்லைநகர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தம்பி கொலையுண்ட ஆத்திரத்தில் இரு சக்கர வாகனத்தை எரித்தது உள்ளிட்ட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் தூக்கி என்கிற நாகூர் அனிபா 20 இவர் கொலையுண்ட வாழைக்காய் விஜய்யின் நண்பர் ஆவார். இந்நிலையில் குப்பாங்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்த புருஷோத்தமன் என்பவரிடம் கத்தியை காட்டி 200 ரூபாய் வழிபறி செய்தது தொடர்பாக இவர் தில்லைநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY