பாவம் போலீஸ்… திருச்சி பஸ் ஸ்டாண்ட்டில் கண்ட காட்சிகள்

600
Spread the love

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் 2வது நாளாக உழவர் சந்தை செயல்பட்டது வருகிறது, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  போலீசாரின் அறிவுரைகளை கேட்க பொதுமக்களுக்கு பொறுமையும் இல்லை, நேரமும் இல்லை என்பதேயே அங்கிருந்த நிலை காட்டியது. சிலர் வரிசையில் நிற்க அலுத்துக்கொண்டனர். இன்னும் சிலர் குறிப்பிட்ட இடத்தில் நிற்க சிரமப்பட்டனர். அதிலும் ஒருவர் பொறுமை இழந்தவராக “இங்குள்ள போலீசாரையும் மற்ற துறை அதிகாரிகளையும் பார்த்து பொதுமக்கள் கருவேப்பிலை வாங்குவதற்கு நான் ஏன் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்” என கேட்டு சண்டைக்கே போக ஆரம்பித்தார். இன்னும் சிலர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு ஒவ்வொருவராக காத்திருந்து வாங்கி செல்லாமல் வியாபாரிகளிடமும்,  அதிகாரிகளிடமும் போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர்….  

LEAVE A REPLY