Skip to content
Home » திருச்சியில் பைக் சாகசம்……ரூ. 12 ஆயிரம் அபராதம்… எச்சரித்த போலீசார்….

திருச்சியில் பைக் சாகசம்……ரூ. 12 ஆயிரம் அபராதம்… எச்சரித்த போலீசார்….

  • by Senthil

திருச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்கில் ரேசிங் சாகசம் செய்து அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கடந்த 10 நாட்களாக பேசும் பொருளாக மாறி வருகிறது – உயிரை பயணயம் வைத்து பதின்ம வயது இளைஞர்கள் ரேசிங் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு நெஞ்சை பதற வைக்கிறது.

இந்நிலையில் இந்த இளைஞர்கள் யார் ? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர். அந்த வாகனத்தின் பதிவெண் கொண்டு விசாரணை செய்ததில் அந்த வாகனம் திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது – போலீசார் அவரிடம் விசாரித்த போது கடந்த 6 மாதத்துக்கு அந்த

இரு சக்கர வாகனத்தை அவர் விற்பனை செய்ததும், தற்போது அந்த இரு சக்கர வாகனத்தை முத்தரசநல்லூரை சேர்ந்த ஒருவர் வைத்திருந்ததும் தெரிய வந்தது – இதனையடுத்து பைக்கை வைத்திருந்தவர் மீது திருச்சி கோட்டை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு ரூ.12,000 அபராதம் விதித்துள்ளனர்.

காவல்துறையினர் எவ்வளவு வலியுறுத்தினாலும் இதுபோன்ற பதின்ம வயது இளைஞர்கள் சாகசம் என்கிற பெயரில் தாறுமாறாக வாகனங்களை இயக்கிக் அதிக விபத்துகளை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது – எனவே பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று காவல்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!