திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கோகிலா. இவர் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை கோகிலா வீட்டின் அருகேயுள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவிலரில் வந்த 2 மர்மநபர்கள், திடீரென அவர் கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோகிலா, இதுகுறித்து துறையூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகிறன்றனர்.