திருச்சி போலீசை சிறையில் வைத்து பூட்டியவர் மீது வழக்கு..

194
Spread the love

மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மீது தாக்கு: திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்த மோகன்(30) என்பவர் பாளையம் பஜார் பகுதியில் ஸ்ரீ முருகன் மெடிகல் ஷாப் நடத்தி வருகிறார். இந்த மெடிக்கல் ஷாப்பில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(30) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் நடத்தை காரணமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்கள் வெங்கடேஷ் என்கிற சதீஷ்(29), ஸ்ரீநிவாசன் (22), கார்த்திகேயன்(21) ஆகியோருடன் வந்து மோகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மோகனை தாக்கியதோடு கடையில் இருந்த சுரேஷ், கணபதி ஆகியோரையும் தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சிறைச்சாலையில் போலீசை வைத்து பூட்டியவர் கைது: திருச்சி அரியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் பணியின் நிமித்தமாக திருச்சி மத்திய சிறைச்சாலை சென்றுள்ளார். அங்கு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஹரிஹரனின் ஹரிஷ் (32) என்பவர் பணி செய்து வந்த வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டியதோடு, அவரை சிறை அறைக்குள் வைத்து பூட்டி உள்ளார். இதன் காரணமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேகே நகர் போலீசார் ஹரீஸ் மீது அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிந்துள்ளனர். மேலும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

அதிக வரதட்சணை கேட்ட கணவன் மீது வழக்கு: திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோடு ஜெயில் கார்னர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(40). இவருக்கும் துர்காதேவி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 20 சவரன் நகை, 3 லட்ச ரூபாய் பணம், வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் ராஜசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் துர்காதேவியை துன்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கணவர் ராஜசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

கஞ்சா விற்ற 5 பேர் கைது:  திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அங்கு நடத்திய சோதனையில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பாலு என்கிற பூபாலன் (26), மதன் என்கிற மதுபாலன்(29), லட்சுமணன்(41) ஆகியோரை எ.புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் பாலக்கரை ரயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சுப்பிரமணியன்(43) என்பவரை பாலக்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்ரீரங்கம் அழகிரி புரம் செக்போஸ்ட் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த கார்த்திக் என்கிற மகாமு(27) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓல்டு மேன் மாயம்: திருச்சி திருவானைக்காவல் கொண்டையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(71). இவர் ஓய்வு பெற்ற முன்னாள் கிராம உதவியாளர் ஆவார். இவர் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ரஞ்சிதம்(65) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் போலீசார் முதியவரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY