அடுத்தவரின் மனைவியுடன் ”கடலை”… திருச்சி போலீசில் புகார்…

592
Spread the love

பிரேமானந்தா பள்ளி மாணவர் மாயம்:  திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சந்தோஷ்குமார்(14). திருச்சி மணிகண்டம் பாத்திமா நகர் பிரேமானந்தா பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தோஷ்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் சந்தோஷ்குமாரை தேடி வருகின்றனர்.

அதிமுக பிரமுகர் வாகனம் திருட்டு: திருச்சி புத்தூர் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜன் அதிமுக வட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். கட்சி பணியாக வெளியே சென்றவர் இரவு வீட்டிற்கு வந்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரஸ்ட் தலைவருக்கு கொலை மிரட்டல்: ஸ்ரீ மதுர கவி படையாச்சி டிரஸ்ட் தலைவராக திம்மராய சமுத்திரத்தை சேர்ந்த வேங்கட ராமானுஜம்(65) இருந்து வருகிறார். இந்த டிரஸ்ட் சொத்துக்களை ஜெயரட்சகன் என்பவர் மோசடி செய்தது தொடர்பாக தாசில்தார் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது. ஜெயசந்திரன், சம்பத், வரதராஜ நாயுடு, சேகர் ஆகியோர் தாக்க முற்பட்டதோடு மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து கோர்டில் புகார் மனு அளித்ததின் பேரில் கோர்ட் உத்தவின் படி ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

மாமனாருக்கு கத்தி குத்து: திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி(65). இவரது மகளை குளப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மகள் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்து மருமகன் சண்முகத்திடம், மாமனார் ரெங்கசாமி தட்டி கேட்ட போது கத்தியால் குத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

வரதட்சணை கொடுமை – திருச்சி எடமலைப்பட்டிபுதுார் இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(25). இவருக்கும் மோனிகா(22) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அப்போது 41 பவுன் நகை மற்றும் 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் வினோத்குமாரும், அவரது மாமியார் பிச்சையம்மாளும் கொடுமைப்படுத்திய தாக கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

மனைவியிடம் பேசியதால் தகராறு: திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(35). இவரின் மனைவியுடன் கே.கே.நகா், காந்தி நகரை சேர்ந்த அமல்ராஜ்(34) என்பவர் வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த கணவர் கணேசன் இது குறித்து கேட்ட போது ஏற்பட்ட தகராறில் மிரட்டப்பட்டு உள்ளார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குழாயடியில் பளார்: திருச்சி ஜெயில் கார்னர், பென்சனர் காலனியை சேர்ந்த ஜெயலட்சுமி(21) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வசந்தி(55) என்பருக்கும் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY