ஊரடங்கில் நடந்த திருவிழா… திருச்சி போலீஸ் அதிர்ச்சி… வீடியோ

1480
Spread the love

திருச்சி கம்மாளத் தெருவில் உள்ளது கன்னிகா பரமேஸ்வரி கோயில். இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த திருச்சி மாநகர போலீசில்  அனுமதி கேட்டுள்ளனர். அப்போது நிர்வாகத்தினர் 30 பேருக்கு குறைவான உபயதாரர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போலீசார் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அம்மன் வீதி உலா நடைபெற்ற போது 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். இப்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY