முதியவருக்கு அறை… திருச்சி ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

449
Spread the love

திருச்சி மாநகரில் உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானா வளைவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவரின் பின்புறம் டூவீலர் மோதியது. இதனால் கோபடைந்த முதியவர் சத்தம் போட டூவீலரில் சென்ற போலீஸ்காரர் முதியவரின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவங்கள் அருகில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகியது. இந்த சம்பவம் நடத்தப்பட்ட விசாரணையில் முதியவரை அறைந்த நபர் உறையூர் போலீஸ் ஏட்டு இளங்கோ என்பது தெரியவந்தது. தற்செயலாக நடந்த விபத்தின் போது முதியவர் ஆபாசமாக பேசியதால் கோபமடைந்து அடித்து விட்டதாக விளக்கம் அளித்தார். எனினும் ஏட்டு இளங்கோவன் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். 

LEAVE A REPLY