கொரோனாவை வென்ற திருச்சி போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு..

96
Spread the love

திருச்சி மாநகரத்தில் 1769 பேர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் கொரோனா நோய் பரவல் காலத்தி0லும் தொடர்ந்து பணியாற்றியதில் 142 திருச்சி மாநகர காவல்துறையினர் 142 பேர் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்.

 இவ்வாறு பாதிக்கப்பட்டு நான்காவது கட்டமாக 32 மாநகர காவல்துறையினர் பணிக்கு திரும்பி உள்ளனர். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருச்சி மாநகர காவல்துறை கமிஷனர் லோகநாதன் வரவேற்று பணி பாராட்டு சான்றிதழ்கள், பழங்கள், முகச்கவங்கள், ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர் பவன் குமார், வேதரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY