திருச்சியில் துப்பாக்கியை காட்டி பணம் பறித்தது யார்? போலீசார் விசாரணை

359

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து திரும்பி இன்று அதிகாலை தலைமை தபால் நிலையம் நோக்கி  கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனைப் பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார், கேரள ஆட்களின் காரை மறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 பேர் காரின் கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். காரில் இருந்தநபர்கள் கதவை இறக்க , வெளியில் நின்று கொண்டிருந்த நபர் துப்பாக்கிக்காட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு ஓடிப்போய் காரில் ஏறி சென்று விட்டனர். சில நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த கேரள ஆட்கள் இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தனர். துபாக்கிக்காட்டி மிரட்டி பணத்தை பறித்த நபர்கள் யார்? என்பது குறித்துபோலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி ஆசாமிகள் சென்ற கார் விமானநிலையத்திற்குள் சென்று வந்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே துப்பாக்கி நபர்கள் யாரையோ தேடி வந்திருக்கலாம் என்றும் என்கிற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது.. 

LEAVE A REPLY