டிராவல்ஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி கலெக்டர் உத்தரவு

503
Spread the love

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும் விதமாக பயணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஓட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுபப்படும் நபர்களை டிராவல்ஸ் ஏஜெண்டுகள் கேன்வாஸ் செய்துவிடுவதாக புகார் எழுந்துள்ளது. விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான முதல் மருத்துவ அறிக்கை இரண்டு நாட்களில் பெறப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களை அரசு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதர பயணிகள் இரண்டாவது மருத்துவப் பரிசோதனையை எப்படியும் ஒரு வார காலம் தனியார் ஒட்டல்களில் தங்க வேண்டியிருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தை பொருத்தவரை ஒரு பயணி ஒரு ரூமில் தங்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் 5 நாட்களில் பரிசோதனை செய்து அனுப்பி விடுவதாகவம் 2 அல்லது 3 பேர் வரை தங்க அனுமதி வாங்கித்தருவதாகவும் கூறி பணம் பெறுவதாக திருச்சி தனியார் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் மீது புகார்கள் வந்துள்ளன. அவ்வாறு வந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் ஏஜெண்டுகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY