கொரோனா தொடர்பாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள்..

252
Spread the love

திருச்சி மாவட்ட கலெக்டர் வௌியிட்டுள்ள செய்தி குறிப்பு..  திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4217 பேர் பாதிக்கப்பட்டு 3239 பேர் குணமடைந்து உள்ளனர். கொரோனா rtpcr பரிசோதனைகள் திருச்சி அரசு மருத்துவமனையிலுவும் 6 தனியாா் மையங்களிலும் இதுவரை 72 ஆயிரத்து 589 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனை மற்றும் 15 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3712 பேர் சிகிச்சை பெற்று 3259 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 45 பேர் வீட்டில் தனிமை சிகிச்சையில் உள்ளனர். மாநகராட்சியில் இதுவரை 753 முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 45 ஆயிரத்து 066 பேர் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். கிராமபுறங்களில் 96 முகாம்கள் நடத்தப்பட்டு 4536 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 38 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. விமானம் மூலம் திருச்சிக்கு வந்த 22 ஆயிரத்து 602 பேர் பரிசோதிக்கப்பட்டு 356 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது. ரயில் சாலை போக்குவரத்து வழியாக திருச்சிக்கு வந்தவர்கள் 2417 பேர் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் 780 படுக்கைகளும், தனியாா் உயர்சிகிச்சைக்காக 1327 படுக்கைகளும், இடைநிலை சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 922 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. கவனிப்பு மையங்கள் காஜாமலையில் 200 படுக்கைகளும், வேளாண் கல்லுாாியில் 200 படுக்கைகளும், யாத்திரை நிவாஸில் 400 படுக்கைகளும், அரசு தனியாா் நிறுவனங்களில் 2090 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY