முழு ஊரடங்கு.. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்

702
Spread the love

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நாளை 5ஆம் தேதி மற்றும் 12,19 மற்றும் 26-ம் தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6மணி வரை எந்தவித தொடர்பும் இன்றி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசியத் தேவையான பால், மருத்துவமனைகள், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.
கரோனா நோய்த்தடுப்பு அத்தியாவசிய பணி அலுவலர்கள் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்படுவார்கள்.கரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த முழு உலகிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY