திருச்சி விஐபிகளை கையில் வைத்து கொள்ளையடித்த ‘டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக் சென்டர்’

2607
Spread the love

திருச்சியின் பிரபல டாக்டர்கள் 20 பேர் பங்குதாரராக இருக்கும் திருச்சி புத்தூர் ரோட்டில் இயங்கி வந்த டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக் சென்டருக்கு நேற்று சீல் வைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 2013ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சென்டரை சுமார் 7 வருடம் கழித்து அனுமதியின்றி 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி சீல் வைத்திருக்கிறது. இதுவரையில் அனுமதி இல்லாமல் இந்த கட்டிடம் இயங்கி வந்தது திருச்சி மாநகராட்சிக்கு தெரியாதா? என பொதுமக்கள் கேள்விக்கேட்கின்றனர். சிக்கன் குனியா பரவிய நேரத்திலும், டெங்கு பரவிய நேரத்திலும் டயக்னோஸ்டிக் சென்டரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்த சென்டருக்கு திருச்சி மாநகரம் மட்டுமல்ல திருச்சி மாவட்டம் அருகில் உள்ள பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், கடலூர் வரையிலான மாவட்டங்களில் இருந்தும் என சுமார் 200 ஆஸ்பத்திரிகளுடன் தொடர்பு உள்ளது. அங்கிருந்து வரும் டெஸ்ட்டுகளுக்கு 30:70 சதவீதத்தில் ( பரிசோதனை கட்டணம் 30 சதவீதம் டயக்னோஸ்டிக் சென்டருக்கு, 70 சதவீதம் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு) பங்கு போடப்படும். அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 1000த்தில் இருந்து 1200 வரை சாம்பிள்கள் டெஸ்ட்க்காக வரும் என்கின்றனர் சென்டரின் ஊழியர்கள். அந்த வகையில் தான் கொரோனா பரிசோதனை நாள் ஒன்றுக்கு ( ஒரு நபர் கட்டணம் 3 ஆயிரம் ரூபாய்) 1000த்தில் இருந்து 1500 வரை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டெஸ்ட் எடுக்கப்பட்டதில் தவறு இல்லை.. முடிவு தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்பத்திரியின் வேண்டுகோளின்படி ரிசல்ட் பாசிட்டிவ் அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட நோயாளியை அட்மிஷன் போடப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டில் இருந்தே அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என விஐபிகளை கையில் வைத்துக்கொண்டு திருச்சி டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக் சென்டர் இதுவரையில் கோடிக்கணக்காக கொள்ளையடித்திருக்கிறது என்கின்றனர் விபரம் தெரிந்த டாக்டர்கள். தொடர்ந்து இந்த சென்டர் பல ஆண்டுகாலமாக தப்பி வந்த நிலையில் திருச்சி கலெக்டர் சிவராசு முற்றுப்புள்ளி வைத்து இருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர். இந்த விஷயத்தில் பலவகையில் பிரஷர் இருந்தும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.. இவ்வளவு ஏன் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துக்கொண்டிருந்த போது ‘ ஒரு விஐபி போன் போட்டு அதிகாரிகளிடம் பேச முயற்சி செய்தார் ‘ அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்கின்றனர் ஊழியர்கள்.. இந்த விவகாரத்தில் பல ஆண்டுகாலமாக சென்டருக்கு உடந்தையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.. 

LEAVE A REPLY