திருச்சி மாவட்ட அரசு விடுதிகளுக்கு 40 சமையலர் வேலை…

890
Spread the love

திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் நடைபெறும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி விடுதிகளில் சமையலராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண் சமையலர் 25, பெண் சமையலர் 15 பணி இடங்களுக்கு ஆட்கள் தேவை. தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு 15 ஆயிரத்து 700 சம்பளம் வழங்கப்படும். இதர படிகள் தனி. சைவம் அசைவம் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். நேர்காணல் நடத்தப்பட்டு அதன் பின்னர் தேர்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, பாஸ்போர்ட் புகைப்படத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 18.09.2020. கூடுதல் விவரங்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY