திருச்சியில் காய்கறி/பழங்கள் மொத்த வியாபாரம் இன்று இரவு இருக்காது..

202
Spread the love

திருச்சி மாவட்டக்கலெக்டர் சிவராசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது 21.06.2021 காலை 06.00 மணி வரை மேற்படி முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் மேற்படி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் மொத்த வியாபாரிகள் கோரிக்கையினை ஏற்று தற்காலிக மொத்த வியாபாரம் நடைபெறும் பகுதியினை தூய்மை செய்து கிரிமிநாசினி தெளிப்பதற்கு ஏதுவான வகையில் மாநகர பகுதிகளில், மேலபுலிவார்ரோடு மற்றும் பாலக்கரை பஜார் பகுதிகளில் தற்போது இயங்கி வரும் காய்கறி/பழங்கள் மொத்த வியாபாரம் (Wholesale) எதிர்வரும் சனிக்கிழமை 12.06.2021 அன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செயல்படாது எனவும், மேலும் எதிர்வரும் ஞாயிறு 13.06.2021 அன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மேற்படி பகுதிகளில் வழக்கம் போல் காய்கறி/பழங்கள் மொத்த வியாபாரம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY