உள்ளாட்சி ஏலம்.. நடவடிக்கை எடுப்பாரா திருச்சி கலெக்டர்?

171
Spread the love

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்டது வலையூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டதாக தகவல் வெளியானது. மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பரமேஸ்வரி. இவரது கணவர் முருகன். இவர்தான் ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏலம் எடுத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. வலையூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் என அனைத்து பதவிகளும் ஏலம் விடப்பட்டுள்ளது.

இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவியை எம்எல்ஏவின் கணவர் முருகன் 14 லட்சத்துக்கும், ஊராட்சி தலைவர் பதவியை ரெங்கராஜ் என்பவர் 10 லட்சத்துக்கும், துணைத்தலைவர் பதவியை ஆனந்த் என்பவர் 2.92 லட்சத்துக்கும் ஏலம் எடுத்திருக்கின்றனர். இதில் எம்எல்ஏவின் கணவர் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ஒன்றிய குழு தலைவராவார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஏலம் விடப்பட்டது குறித்து  பொதுமக்கள் சார்பில் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY