திருச்சி மாநகராட்சி கமிஷனராக சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்பு

304
Spread the love

 திருச்சி மாநகராட்சி கமிஷனாக இருந்த ரவிச்சந்திரன் ஆவடி மாநகராட்சி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவசுப்பிரமணியன் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து புதிய திருச்சி மாநகராட்சி கமிஷனராக சிவசுப்பிரமணியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய கமிஷனர் சிவசுப்பிரமணியன் மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார். 

LEAVE A REPLY