திருச்சி ஜிஎச்சில் கொரோனாவுக்கு அட்மிட் போட தாமதம்.?. மூதாட்டி பலி..

252
Spread the love

திருச்சி  மேல சிந்தாமணியை சேர்ந்த 74 வயது பெண் ஒருவர் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்காக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்படவே அந்த மூதாட்டி திருச்சி அரசு மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார். இரவு 11.30 மணிக்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உறவினர்களிடம் முதலில் இடம் இல்லை என கூறப்பட்டதாக தெரிகிறது. பின்னர் ஒரிஜினல் ஆதார் அட்டை கேட்டதாக தெரிகிறது. இப்படியாக ஆம்புலன்சிலேயே சுமார் 2 மணி நேரமாக அந்த மூதாட்டி இருந்தாகவும் அதன் பின்னர் சிகிச்சைக்காக அட்மிஷன் போட்ட சில மணி நேரங்களிலேயே அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. திருச்சியில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY