கருமண்டபம் ஆக்கிரமிப்பு என்ன ஆச்சு?.. திருச்சி மாநகராட்சி அலட்சியம்..

207
Spread the love

திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகாலமாக அப்பகுதிகளில் உள்ள சாக்கடை தூர் வாரப்படாததால் மழைநீர் வடிகால் சரிவர பராமரிக்கப்படாததாலும்  மழைக்காலத்தில் அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

 இதற்கு முக்கிய காரணம் 25 அடி வாய்க்கால் ( முன்பு பாசன வாய்க்கால் தற்போது மழைநீர் வடிகாலாக உள்ளது)  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தான். இதுகுறித்து etamilnews.comல் கடந்த 6ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் மனு அளித்தனர் அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை வந்து பார்வையிட்ட திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அளந்து குறியீடு செய்தனர்.. ஆனால் நடவடிக்கை அன்றோடு சரி அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர் பொதுமக்கள்.. இது தொடர்பாக அவர்கள் கூறுவது.. அப்பகுதியில் அளவுக்கு அதிகமான ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்ன செய்வது என்று அதிகாரிகளுக்கு புரியவில்லை.. இதனாலேயே சைலண்ட்டாகி விட்டனர் என்கின்றனர்.. கருமண்டபத்தை கவனிக்குமா? திருச்சி மாநகராட்சி…. 

LEAVE A REPLY