திருச்சி மாநகராட்சி தெரிஞ்சு செஞ்சுச்சா? தெரியாம செஞ்சுச்சா?…

677

16-ம் நூற்றாண்டின் இறுதியில் ராணி மங்கம்மாள் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தபோது, காவிரியில் நீராடுவதற்காக சிந்தாமணி அருகே  (ஒயாமரி எதிர்புறம்) தனியாக படித்துறை கட்டப்பட்டது. சுமார் 300 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த பழமையான படித்துறையை புனரமைத்து, தொல்லியல் சின்னமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி திருச்சி சிவா, வரலாற்று பேராசிரியர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஏற்கனவே அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், படித்துறையையொட்டி புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக  ராணி மங்கம்மாள் கட்டிய படித்துறையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் நேற்று இடித்து தள்ளியது. இதனை கேள்விப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரிஞ்சு செஞ்சாங்களா? தெரியாம செஞ்சாங்களா?னு தெரியலனு புலம்புகின்றனர் வரலாற்று பேராசிரியர்கள்… 

 

LEAVE A REPLY