20 கிமீ சைக்கிளில் சென்று சர்ப்ரைஸ் விசிட் அடித்த திருச்சி டிஐஜி

677
Spread the love

 முழு ஊரடங்கு தொடர்பாக சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், போலீசாரின் பணிகள் குறித்து திருச்சி டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கத்தின் பின்புறம் உள்ள டிஐஜி அலுவலகத்தில் இருந்து திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் வரை 20 கிமீ தூரத்திற்கு சைக்களில் சென்ற டிஐஜி ஆனி விஜயா அங்கு ஆய்வு மேற்கொண்டார்..

  திருச்சி ஏர்போர்ட் சோதனைச்சாவடி, எம்ஐடி, மற்றும் திருச்சி புதுக்கோட்டை எல்லையான மாத்தூர் சோதனை சாவடிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தார். 2 நாட்களுக்கு முன்னர் திருச்சி டிஐஜியாக பதவி ஏற்றுக்கொண்ட ஆனி விஜயா தன்னுடைய முதல் ஆய்வை 20 கிமீ சைக்கிளில் சென்று நடத்தியது குறிப்பிடதக்கது.. 

 

LEAVE A REPLY