திருச்சி மாவட்ட க்ரைம் செய்திகள்…

120
Spread the love

 திருச்சி மாவட்ட செய்திகள்…..

வீட்டை உடைத்து ஒரு லட்சம் நகை திருட்டு – திருச்சி இனாம்குளத்தூர், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மரிய லூயிஸ்(37).இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்த போது அவர் வீட்டு கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இனாம்குளத்தூர் போலீசாரிடம் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9.25 சவரன் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

டீக்கடையில் பிராந்தி குடித்ததால் தகராறு – திருச்சி முசிறி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் ரவிக்குமார் என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். ரெங்கராஜ் என்பவர் டீக்கடை முன்பு பிராந்தி குடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக ரவிக்குமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரெங்கராஜ், ராஜா, புது ராஜா, டேவிட், அருண், ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு ரங்கராஜ் கைது செய்யப்பட்டார். இதேபோல ரெங்கராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிக்குமார், பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

போதையில் விழுந்தவர் பலி – திருச்சி துறையூர் நாகலாபுரத்தை சேர்ந்த நிஷாந்த்(29), சாணக்கியன்(27), மோகன்(47) ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூவரும் அங்கு உள்ள கால்வாய் திட்டில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மது அருந்திய நிலையில் சாணக்கியனும், மோகனும், விஷாலிடம் வண்டி சாவி கேட்டுள்ளனர். இதற்கு நிஷாந்த தர மறுக்கவே அவரை பிடித்து தள்ளி விட்டுள்ளனர். இதில் வாய்க்கால் பள்ளத்தில் விழுந்த நிஷாந்த் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கட்டிலில் இருந்து விழுந்தவர் சாவு – திருச்சி பெட்டவாய்த்தலை பழங்காவிரி பகுதியை சேர்ந்தவர் மலைக்கொழுந்து(77). இவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை – திருச்சி திருவெறும்பூர் வேணுகோபால் நகரை சேர்ந்தவர் ராமர்(39). ஆட்டோ டிரைவரான இவர் தனது வாகனம் ரிப்பேர் ஆனது காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்திருக்கிறார். இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இதனை மனைவி ஜெயலட்சுமி கண்டித்துள்ளார். இதன் காரணமாக வெறுப்படைந்த அவர் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய திருவெறும்பூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 முதியவர் மாயம் – திருச்சி புத்தாநத்தம் பூங்குன்றம் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் டீ குடித்து வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து புத்தாநத்தம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

 இளம்பெண் ஓட்டம் – புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவருக்கும் திருச்சி குண்டூர் எம்ஐஈடி பகுதியை சேர்ந்த அல்ஜீரா (23) என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஹன்சிகா தனது தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறி குண்டூர் வந்துள்ளார். தனது குடும்பத்துடன் இரவு படுத்து இருந்த அவரை காலையில் பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY